உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
பரம்பொருளாய் பார் முதற் பொருளாய் வரம் தரும் அருளாய் வினா விடையாய் உரமாய் உலகுக்கு விளங்குவதறிய Rali
அட்டமா சித்திபெற காட்டினிலே தனியமர்ந்தால் குட்டிக் குரங்காக மனமுன்னைத் தொடர்ந்து வரும் Pithan
தப்படி இல்லாள் இருக்க ஒருத்தியை இப்படித் தன்தலை மேல்வைத்துக் கூத்தாடும் அப்பன் செயலிங்கு சற்றும் சரியோடி Rali
கண்ணனும் ராமனும் கண்டதிப் பாரதம் எண்ணிடும் போதிலே இன்பமே ஊறிடும். SKC
ஒருகனவு நீங்கி மறுகனவு சேர்க்கும் ஒருகதவு தானே மரணம்? - BKR
தீச்சுடலை வெண்ணீறு மட்டுமே பூசித் திகம்பரனாய் உண்கலன் கையிலேந்தித் தீசூழ்ப் பிணமெரியும் மண்ணிலோர் பித்தனாய் ஆடித் திரியதேவி பெண்மனம் வாடிவருந் தாதோ இறைவாநீ Rali
மாளாத காதல் நோயாளன் போல் மருந்துண்டும் தாளாத தலைவலி தவிர்த்திலனே ! SKC
கோளாலே வாராது காணிது இல்லாள்சொல் கேளாமை யாலே வரும் BKR
இருமி வருந்தலின் தூக்கம் மயக்கம் தரும்மருந் துண்ணல் சிறப்பு. Rali
மறையோன் நிறையாப் பிறையோன் இறவாக் கறையோன் குறையாப் பொறையோன் - BKR
குளித்திடும் நதியில் கொடுநாகம் வென்றான் குளித்திடும் கோபியர் கொள் உடை ஒளித்தான் SKC
துளிர்த்ததோர் ஆலிலை தோன்றி யுகம் படைத்தான் துளிர்த்திடும் உயிரினம் தோறும் தனை விதைத்தான் SKC
அடிமுடி காணாது நின்றது ஒருவர் அளப்பறிய ரூபம் காட்டியது ஒருவர் மாதுக்கொரு பாகம் ஈன்றவர் ஒருவர் திருமார்பினில் தேவியைத் தரித்தவர் ஒருவர் எல்லைக் காட்டில் களிநடம் புரிவதொருவர் அலைகடல் மீதில் அறிதுயில் புரிவதொருவர் Shanthi
வாலியை வதைக்க வரிசிலை அணிந்தவன் ஆலிலை உறங்கி ஆனந்தம் கொண்டவன் மாலிருஞ் சோலையில் மகிழ்வுடன் நின்றவன் SKC
பள்ளுக்குள் இன்னிசையாய் பூவினுள் நாற்றமாய் கள்ளினுள் தீஞ்சுவையாய் காண அழகலையாய் விள்ளவொண்ணா வாழ்சக்தி காதலன் கைலாயன் Rali
விட்டெறிந்த தாடங்கம் வெண்ணிலவாய் ஒளி வீச பட்டர் பிரான் அந்தாதிப் பாசுரங்கள் பாடி நிற்க சட்டெனவே சரபோஜி சரணமெனக் கை கூப்ப இட்டமுடன் வரம் தந்தாள் என் அன்னை அபிராமி. SKC
ஆதிமுதல் நாயகனின் பாதி உருவானவளே பூதியணி தேவி அனு பூதி நிலை அருள்வாயே Shanthi
சிக்கலில் வேல் கொண்டு செந்தூரில் போர் கண்டு பக்கமே குன்றமென பாவையைக் கைப்பிடித்து தக்கதோர் நேரம் என்று தமையனின் உதவி கொண்டு அக்குற மகளையும் ஆசையாய் மணமுடித்து சிக்கிய வேலனை SKC

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.