"சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய காதல் நாவல். வசுமதி பள்ளி செல்லும் தன் மகளுடன் தனியாக தங்கியிருந்து வேலைக்கு செல்லும் ஓர் இளம்பெண். கணவன் சண்முகம் கத்தார் நாட்டில் பணிபுரிகிறான். சாதாரணமாக செல்லும் சலிப்பான வாழ்க்கையில் ஒரு நாள் வசுமதிக்கு புதிய அனுபவம் ஏற்படுகிறது. அவளை தன் தேவதையாக மனதில் கொண்டாடுகிறான் அவளுடன் பணிபுரியும் கண்ணன். இது தெரியவரும் வசுமதி எப்படி இதை எதிர்கொள்கிறாள்? இளமைத்துள்ளலான காதல் கதை உங்கள் இதயத்தை இதமாய் வருடும். பரவசத்திற்கு தயாராகுங்கள். நாவலிலிருந்து .. தண்ணீர் குடித்தவள் நிலைக் கண்ணாடி முன் நின்று பார்த்தாள். முப்பத்திரண்டு வயது. ஆனால் இருபத்தாறுக்கு மேல் மதிக்க முடியாத தோற்றம். காரணம் மொட்டை மாடியில் தினமும் காலையில் செய்யும் யோகா. வட்ட முகம். சற்றே பெரிய கண்கள். கொஞ்சம் புஷ்டியான மழலை கன்னங்கள். ஈர்க்கும் உதடுகள். மென்மையான கழுத்து. எடுப்பான எழிலான இளமை..இன்னும்...இன்னும்.. தன்னை ரசித்த வசுமதி பெருமூச்சு விட்டாள். தேடிச்சென்ற பணம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. சண்முகத்திடம் ஜாடைமாடையாக சொன்னாலும் அவன் புரிந்து கொள்வதில்லை. *** இருவரும் காஃபி வாங்கிக்கொண்டு டேபிள் பார்த்து அமர்ந்தனர். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கண்ணன் கேண்டீனுக்குள் நுழைந்தான். அவன் பார்வை வசுமதி மீதே நிலைத்திருக்க கீதா அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணன் வந்துவிட்டதை அறிந்த வசுமதி வந்துட்டானா என்று விழிகளால் கேட்க கீதா ஆமோதிப்பாய் தலையசைத்தாள். வசுமதிக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதுவித உணர்வு தாக்கியது. *** அவன் வலது கரம் அவள் கூந்தலை அளைந்தது. மெதுவாய் அவள் நெற்றியைப் பிடித்தான். அவன் விரல்கள் அவள் வலது கன்னத்தை இதமாய் பிடித்தது. மென்மையான மழலைக் கன்னங்களை சட்டென்று தன்னருகில் இழுத்து அவற்றில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.வசுமதி தடுக்கவில்லை. மெலிதாய் கிறங்கினாள். கண்ணன் ஊக்கமானான். அவள் கன்னங்களைக் கவ்வினான். *** கண்ணன் அவள் முகத்தை நிமிர்த்தினான். முகமெங்கும் முத்தமிட்டான். வசுமதி தன் இரு விழிகளையும் மூடிக்கொள்ள அவள் இதழ்களில் அழுத்தமாய் முத்தமிட்டான். ஜன்னல் வழியே வீசிய குளிர் காற்று இருவரையும் இன்னும் முன்னேற வைத்தது. கண்ணன் ஒரு நிமிடம் அவளையே பார்த்தான். அவன் விழிகளில் தேடல் இருப்பதைப் புரிந்த வசுமதி ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்து கொள்ள கண்ணன் கதவைத் தாழிட்டான். வசுமதிக்கு படபடத்தது. அதேநேரம் கண்ணனை மறுக்கவும் அவளுக்குத் தோன்றவில்லை. அருகில் வந்த கண்ணன் அவளை அப்படியே அள்ளிக் கொண்டான். மெல்லிய பூஞ்சரத்தைக் கையாள்வது போல் அவளை மஞ்சத்தில் கிடத்தினான். இதழ்களால் எல்லா இடங்களிலும் ஒற்றி எடுத்தான். வசுமதி அவனை பாசமாய் பார்க்க அவன் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறினான். இருவருக்கும் தடையாக இருந்த இருவரின் ஆடைகள் தரையைத் தழுவிக்கொண்டன. காளை தன் கொஞ்சலின் வேகத்தை அதிகப்படுத்தினான். மென்மையிலிருந்து வன்மைக்குக் கட்சி மாறினான். பெண்மை முதலில் தயங்கியது. பின் நிறைவான இன்பத்தில் மயங்கியது. வசுமதியின் விழிகள் நிறைவை வெளிப்படுத்த கண்ணன் காதலாய் பார்த்தான். நெற்றியில் இதமாய் முத்தமிட்டு களிப்பினால் அவள் அடைந்த களைப்பைப் போக்கினான். ஒரு நிமிடம் வையம் இயங்காமல் நின்றுவிட்டதோ என்று ஐயம் கொண்ட வசுமதி கண்ணனின் அணைப்பில் இதம் கண்டாள். இதயத்திலோ அவனை மட்டுமே அக்கணம் கொண்டாள்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.