குழந்தைகளுக்கு, தங்களின் பருவத்தில் பிடித்தமான விஷயங்களில் ஒன்று கதை கேட்டல். சிறந்த கதைகள் ஒரு குழந்தையின் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதோடு, அதன் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது.
ஒரு குழந்தையின் மனவளர்ச்சியானது, 6 வயது வரை மிக விரைவாக நடைபெறும் என்று குழந்தை உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 6 வயதுவரை, அந்த மனவளர்ச்சி பந்தயக் குதிரையின் வேகத்தில் இருக்கும் எனவும், அதன்பிறகு அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்து நிலையான மற்றும் நீடித்த வேகத்தில் செல்கிறது.
கல்வி நிலைய முறையிலான அறிதல் ஒரு குழந்தைக்கு அறிமுகமாகும் முன்னதாக, அந்தக் குழந்தைக்கு வீடுதான் பள்ளிக்கூடம். பல காலங்களாக கதை சொல்வதின் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதை சொல்லும் முறையானது யுகயுகமாக நீடித்து மற்றும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு அதன் ஆரம்ப பரிணாம கட்டத்தில், பார்க்கும் ஒவ்வொன்றும் அதிசயமாகவே தெரியும். பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தான் செய்துப் பார்க்க விரும்பும். மனமும், அறிவும் வடிவம் பெறும் ஒரு பருவம் அது. இந்த இடத்தில்தான் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகை எளிய மற்றும் சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தலில் பயன்படும் ஒரு அற்புதக் கருவி கதை.

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.