"யமுனாவுடன் ஒரு யாகம்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் காதல் நாவல். ஒரு புதிய பரவசமான அனுபவத்தை படிப்போர் நிச்சயம் பெறுவர. நாவலிலிருந்து அது ஒரு தனியார் அலுவலகம். அரசு யமுனாவை சைடாய் பார்த்தான். ஃபேன் காற்றில் சேலை மெலிதாய் விலகியிருக்க தன்னையும் மீறி வெறித்தான். "என்ன அரசு சார்?" டீக்கடைக்காரப் பாண்டி அருகில் வந்து கேட்க தன்னிலைக்கு வந்தான். "சொல்லு பாண்டி" "என்ன பார்வை எங்கயோ போகுது?" "அழக ரசிச்சேன்" . "நீங்க மட்டுமா ரசிக்கறீங்க ஒட்டுமொத்த ஆபீஸ் ரசிக்குதே" "மத்தவங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கு." "என்ன சொல்றீங்க?" "நான் அவளை இன்னும் ஒரு வாரத்தில் ஓகே பண்ணிக் காட்டறேன்." "முடிவே பண்ணிட்டீங்களா?" "ஆமா" "பாவம் சார். ரொம்ப அப்பாவியா இருக்காங்க." "அதான் எனக்கு வெறி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. அழகான பொண்ணுங்க அப்பாவியா இருந்தா அதுல ஒரு கிக்" "அதிலென்ன கிக் இருக்கு?" "ஒண்ணும் தெரியாம இருப்பாங்க நம்மளே எல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்" பாண்டி சிரித்தான். "ஓ நீங்க மெயின் மேட்டருக்கு போயிட்டீங்க." "நான் எப்பவுமே ஃபாஸ்ட்" அரசு சொல்ல சிரித்த பாண்டி போய் விட்டான். அரசு ஃபைலை எடுத்துப் பார்க்க "சார்" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான். யமுனா நின்றிருந்தாள். அவள் அறியாமல் அவளை தலை முதல் கால் வரை பார்த்து ரசிப்பவன் அவள் நேராக இருக்கும் போது மட்டும் கண்களைத் தவிர வேறு எங்கும் பார்த்து பேச மாட்டான். எப்படியாவது இம்ப்ரஸ் செய்து அவளை எங்காவது கொண்டு செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறான். "சொல்லுங்க யமுனா" "இந்த ஸ்டெப் எனக்கு புரிய மாட்டேங்குது இது கொஞ்சம் சொல்ல முடியுமா?" கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் ஒன்றை அரசிடம் காட்டிக் கேட்டாள். "உக்காருங்க" அமர்ந்தாள் இரண்டு நிமிடங்களில் அவள் சந்தேகத்தை அரசு தெளிவாக்கினான். அவள் மகிழ்ந்தாள். அவனை ஆச்சரியமாய் பார்த்தாள். "சார் நீங்க செம ஜீனியஸ்" அவள் சொல்ல அந்த புகழ்ச்சியை விரும்பாதவன் போல் நடித்தான். "யமுனா " "சொல்லுங்க சார் " "பொண்ணு பார்க்க வந்தாங்களே என்ன சொன்னாங்க?" "ஒண்ணும் சொல்லல சார் கலந்துபேசி சொல்றோம்னாங்க ஒண்ணும் காணோம்" அவள் சொல்ல அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான் அரசு. அதில் மெலிதான சோகம் தெரிய "கவலைப்படாதீங்க" என்றான். "அதுக்கெல்லாம் கவலைப்படலங்க" சொன்னவள் அவன் லஞ்ச் பேக்கைத் திறந்து பார்த்தாள். "இன்னிக்கு என்ன சமைச்சுக் கொடுத்திருக்காங்க உங்க மிஸஸ்?" "தெரியல" "ஆச்சரியமா இருக்கு" "ஏன்? " "வொய்ஃப்க்கு ஹெல்ப் பண்ண மாட்டீங்களா சமையல்ல?" "அவளுக்கு அது பிடிக்காது" அவன் சொல்வது பொய் என்று அவனுக்கேத் தெரியும். "என்ன மெனுன்னு நான் பார்க்கறேன்?" சொன்ன யமுனா லஞ்ச் பேககில் இருந்த டிபன் பாக்சை குனிந்து எடுக்க அரசுவின் பார்வை அவள் ஜாக்கெட் மேல் நிலைத்தது. அப்படியே பார்வையை கீழே இறக்கினான். இடை மெலிதாய் ஈர்த்தது. 'இவ செம்ம ஸ்ட்ரக்சர்' தனக்குள் சொல்லிக் கொண்டு அவளை ரசித்தான். அவள் மேல் ஒரு நல்ல நறுமணம் கமழ்ந்தது. சட்டென்று இழுத்து அணைத்து இதழ்களில் இதழ் பதித்து இன்னும் முன்னேறத் தோன்றியது மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான். சற்றே எட்டிப் பார்க்க அவள் பின்னழகு அசர வைத்தது தொட்டுப் பார்க்கத் தூண்டிய மனதை தட்டிவிட நினைத்தும் ஆசை விட்டுப்போகாததால் அவளைத் தாண்டி இருந்த கப்போர்டில் இருந்த ஃபைலை எடுக்கும் சாக்கில் அவள் பின்புறத்தை மெல்ல உரசினான் அரசு. அவளுக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. ஆனால் அவன் மனதில் தீ பற்றியெரிந்தது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.