இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின்போது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது. உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த ""அலை ஓசை"" தமிழில் வந்த குறிப்பிடத்தகுந்த ஒன்று. பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் தில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர்.ஆனால் அப்போது காந்தி மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். காந்தியவதியான கல்கி இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.