இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு. மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். இது கடல்புரத்தைக் குறித்த கதை மாத்திரமல்ல; கடலைப் பின்புலமாக்க் கொண்டு இயற்கைக்கும் மனிதனுக்கும், பழமைக்கும் புதுமைக்கும், தந்தைக்கும் மகனுக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும், அன்பிற்கும் பகைக்கும், உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையிலான சிக்கலான பிணைப்புகளை, அவற்றில் விழுந்துவிடுகிற முடிச்சுக்களை, அவற்றை அவிழ்க்க முயன்று தோற்ற அலைகழிகிற மனத்தின் பாடுகளை எனப் பலதையும் குறித்து ஆதூரத்துடன் பேசுகிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.