"கரணம் தப்பினால் மரணம் ! புகழ்பெற்ற பழமொழி. ஆனால் இது குட்டி கரணம் பற்றிய பழமொழி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கரணம் என்றால் மூலிகை ரகசியம் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூலிகை ரகசியம் உள்ளது. அதன் பெயர் பஞ்ச கரணம். அது ரகசியமாக உள்ளவரை கவலையில்லை. ஆனால அந்த கரண ரகசியம் வெளியே தெரிந்தால், மனித குலம் நாசமடையும். அதனால்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார், அகத்தியர் . தமிழ் மண் வெறும் மூலிகை காடாக இருந்த காலம். தெற்கே வரும் அகத்தியர் பொதிகை மலைச்சாரலில் தவம் செய்து, தென் பகுதியில் இருக்கும் மூலிகை மர்மங்களை ஆய்வு செய்து உரைக்க, அவருடைய சீடர் புலத்தியர் அதனை சுவடிகளை நூலாக எழுதுகிறார். அந்த நூலின் பெயர் அகத்தியர் 12,000. குறிப்புகளை கூறிக்கொண்டே வரும் அகத்தியர், திடீரென்று புலத்தியரிடம், ''நான் இப்போது உனக்கு பஞ்ச கரணி' என்கிற மூலிகை ரகசியத்தை பற்றி கூறப்போகிறேன். இதனை நூலில் குறிப்பு எடுக்காதே. காரணம் இது ரகசியமாக இருக்க வேண்டும். இதனை காதுகள் வழியாக கேட்டு, மனதில் பதிய வைத்து, யாரையாவது சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். அவனும் அதனை ரகசியமாக வைத்து அதனை தனது வாரிசுக்கு சொல்ல வேண்டும். இப்படியே அந்த பஞ்ச கரணி ரகசியம் வழிவழியாக செல்ல வேண்டும். அதனை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். காரணம் அதனை வெளியிட்டால், மனிதர்கள் அதனை கொண்டு ஒருவரையொருவர் அழித்து கொண்டு விடுவார்கள். அவ்வளவு ஆபத்தானது பஞ்ச கரணி என்கிறார். காற்று, நீர்,மண் என்று சுரண்டி பணம் பண்ணிய மனிதர்கள், மூலிகை மர்மங்களையும் விற்று காசு பார்த்துவிடுவார்கள் என்று பயந்து எல்லாம் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. அகத்தியர் புலத்தியருக்கு அந்த ரகசியத்தை கூறுகிறார்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.