"வாழ்க்கையில் நாம் எத்தனையோ எதிர்பாராத சந்திப்புக்களை, நிகழ்வுகளை சந்திக்கிறோம். அப்படி ஒரு சந்திப்பில் நாயகியை சந்திக்கும் நம் நாயகன், அவள் அறியாமலேயே அவள்மேல் காதல் கொள்ள, தன்னை ஒருவன் தனக்குத் தெரியாமலேயே காதலிப்பதை அறியாமல், தன்னிடம் காதல் சொன்ன வேந்தனுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாயகி கொடுத்த வாக்கு..., அதைக் காக்க போராடும் அவள் நிலை... கழுத்தில் தாலி ஏறிய பிறகு..., கொடுத்த வாக்கா..., கட்டிய தாலியா? என்ற உணர்வில் அவள் போராட..., தன் கனவு மெய்யான பிறகும், அது நிஜத்தில் கனவாகிப் போன நிலையில் போராடும் நகுல்..., தன் காதலை அவளுக்கு உணர்த்தினானா? இல்லையென்றால்...., தன் காதல் மனைவியை, அவள் கொடுத்த வாக்குக்கு இணங்க, அவள் காதலனோடு சேர்த்து வைத்தானா? அவன் கனவு நிஜமானதா? இல்லையென்றால் நிஜத்தில் கனவாகியே போனதா? விடை அறிந்துகொள்ள, என்னோடு பயணப்படுங்கள்."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.