"பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு 'சிறகுகள் முறியு'மிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரது படைப்புகளில் பெண்களுக்கிடையிலான உரையாடல்கள், அவர்களது மன உலகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அம்பையின் வருகைக்குப் பின்பே அவை மேலும் துலக்கமும் கூர்மையும் பெறுகின்றன. தன் எதிர்கால கதையுலகத்தின் முக்கியமான கூற்றைச் சொல்லும் 'வெளிப்பாடு' கதையோடு, அடிக்குறிப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களையும் கொண்ட 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' போன்ற புகழ்பெற்ற கதைவரை இத்தொகுப்பில் உள்ளன. அம்பையின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத, இயற்கைக் காட்சியைக் கித்தானில் தீட்டிய ஓவியம்போலத் தொடங்கி, கவித்துவச் சோகத்தைக் கொண்டிருக்கும் 'மஞ்சள் மீன்' உள்பட சிறியதும் பெரியதுமான பதி்னொரு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. இத்தொகுப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பிரசுரம் பெற்றுள்ளது. A Kitchen in the Corner of the House: These stories marked the beginning of the rise of a distinctly female voice in Tamil literature. Providing a striking contrast with Ambai's first short story collection 'SirakukalMuriya', in terms of the language employed and the form, these modernist stories contain anger, fury and silence. This collection has been republished after a long break."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.