ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது. நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.