"ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட 'அபரஞ்சிப் பொன்'னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது 'ரங்கராட்டினம்' என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் 'ஐந்து குழி, மூன்று வாசல்' என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, 'சித் அசித் ஈஸ்வரன்' என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே 'அந்த ஐந்து குழி மூன்று வாசல்' அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது. ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.