சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் 'சாயாவனம்'. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. 'சாயாவனம்' நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.