"ஒரே ஒரு கொலை ! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது. சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்று வரை விலகாத, சரித்திர பிரியர்களின் மனதை விட்டு நீங்காத மர்ம முடிச்சாக திகழ்வது மாமன்னன் ராஜ ராஜ சோழன் மற்றும் ஆழ்வார் குந்தவை பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான். தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்த கொலையை பற்றி குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையை பற்றி நமக்கு தெரியாமலேயே போயிருக்கும். பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் தலையை கொய்வேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றியவன்! சாளுக்கியர்களையும் நடுங்க வைத்த மாவீரன் ! ஆதித்த கரிகாலன்தான். சுந்தர சோழருக்கு பிறகு அரியணையில் அமர போகிறான் என்று சோழ நாடே உறுதியுடன் நம்பியிருக்க, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். அவனை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் மீது கொலைபழி சுமத்தப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றது கிபி 959-னில் நிகழ்ந்த சேவூர் போரில் ! ஆனால் அவனது கொலை நிகழ்ந்தது கிபி 969-னில்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.