"தன் தோழி, தாமரையின் திருமணத்திற்கு செல்லும் மித்ரா திடீர் மணமகளாக... அவளை திருமணம் செய்து கொள்ளும் அனிருத்தன். எதற்குமே ஆசைப்படாத அனாதை இல்லத்தில் வளர்ந்த மித்ரா, அவனை விட்டு விலகிச் செல்லவும் சுலபமாக முடிவெடுக்க, அதற்கு அவன் சம்மதித்தானா? தான் வளர்ந்த சூழலை விட்டு, திடுமென ஒரு குடும்பத்துக்குள் அடியெடுத்து வைக்கும் மித்ரா எதிர்கொள்ளும் நிகழ்வுகள், சங்கடங்கள், புது இடத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் விதம்... புகுந்த வீட்டினர் அவளை ஏற்கும் விதம் என சூழல்களை அவர்கள் கையாளும் விதமே அலாதியாக இருக்கும். அனாதையாக வளர்ந்த அவள், அவளது பெற்றவளை கண்டு கொள்ளும் இடம், அக்கா நிஷாவின் வாழ்க்கைக்கு அவள் உதவும் விதம்... அனைத்தையும் எவ்வாறு சமன்செய்து வாழ்க்கையை காத்துக் கொண்டாள் என தெரிய தொடர்ந்து படியுங்கள்."
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.