உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற லட்சியம் இல்லாமலே போய் கொண்டு இருக்கிறார்கள், சிலர் இருட்டிலே நடக்கிறார்கள், சிலர் வழியிலேயே நடக்கிறார்கள், சிலர் ஒளியைத் தேடி நடக்கிறார்கள், சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள். சிலர் பட்டு விரித்த பாதையில் நடக்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர். அவ்வப்போது வறுமையின் கொடுமை பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும் தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையை பஞ்சினும் லேசாக மதித்து புன்னகைத்தபடியே முன்னேற்றம் காண வழி தேடும் சுந்தரத்தின் கதைதான் இந்த வழிப்போக்கன்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.