கொரிய மொழிக்கும் நம்முடைய தமிழ் மொழிக்கும் வரலாற்று ரீதியாக நிறைய தொடர்புகள் உள்ளது. நிறைய வார்த்தைகள் மற்றும் சொற்கள் தமிழ் மொழியின் மூலமாகவே வந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ் மொழியின் பெருமையை கற்க கற்கத்தான் அதன் சுவை தெரியும், அது மாதிரிதான் கொரிய மொழியும் பேசும் பொழுது அதன் சுவையை நாம் உணரலாம். கொரிய மொழி முதலில் சீன மொழி வடிவமைப்பிலே இருந்து வந்தது, ஆனால் அது படிப்பதற்கும் எழுதவதற்கும் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. அதற்க்கு பின்னர் கொரிய மொழியையை முதன் முதலில் 1443-ம் ஆண்டு கிங் செஜோங் என்பவர் சில அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து உருவாக்கினார். அதற்க்கு பின்னர் இந்த மொழி மிகவும் எளிய முறையில் நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் UNESCO அமைப்பு மொழியியல் துறையில் சாதிப்பவர்களுக்கு கிங் செஜோங் பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதே போல் அக்டோபர் மாதம் தேதி கொரிய மொழிதினமாக கொண்டாடப்படுகிறது. கொரிய மொழியை நாம் தாய் மொழி தமிழில் கற்றுக்கொள்ள வெளிவரும் முதல் புத்தகம் இதுவாகும். இந்த புத்தகம் கொரிய மொழியை புதியாய் கற்பவர்களுக்கு மிக எளிய முறையில் தமிழ் வழி மூலம் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தகத்தில் கொரிய எழுத்துக்கள் பற்றியும் அதை நாம் எவ்வாறு உச்சரிக்க வேண்டும், எவ்வாறு எழுத வேண்டுமென்று அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கபட்டுள்ளது. மேலும் வாக்கிய மற்றும் இலக்கண அமைப்பு அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கொரிய மொழியை கற்றல் வழிமுறையின் அடிப்படையில் நான்கு அல்லது ஐந்து நிலைகளாக பிரிக்கலாம். இந்த புத்தகம் முதல் நி
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.